அமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லீம் கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் ஓவைசி கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இடிஹதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் டிடிவி தினகரன், ஓவைசி கட்சியின் தமிழக தலைவர் வக்கீல் அகமது, பொறுப்பாளர் ரஹமதுல்லா தாயப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.







