முக்கியச் செய்திகள் இந்தியா

950 குழந்தைகளை மீட்ட பெண் காவலர்!

மும்பை ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் ரேகா மிஷ்ரா இதுவரை வீட்டைவிட்டு வெளியேறியவர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கடத்தப்பட்ட சிறுவர்கள் என 950 குழந்தைகளை மீட்டுள்ளார்.

ரேகா மிஷ்ரா மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கடத்தப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கண்டறிந்து காப்பாற்றும் பணியின் பொறுப்பாளராக உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இவர் கடந்த ஆண்டுகளில் வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிய பெண்கள், குழந்தைகள் அதேபோல் காணாமல்போனவர்கள், கடத்தல்காரர்களால் கடத்திவரப்பட்ட குழந்தைகள் கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். ரேகாவின் இந்த பணியைப் பாராட்டி அவருக்குக் கடந்த 2017-ம் ஆண்டு பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி மத்திய அரசிடம் இருந்து ‘ Nari Shakti Puraskar’ பெண் சக்தி விருதைப் பெற்றார்.

ரேகா மிஸ்ரா மீட்பு நடவடிக்கை குறித்து அவர் கடந்த வந்த பாதை குறித்த மகாராஷ்டிரா மாநில பாடபுத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. ரேகாவால் மீட்கப்பட்ட பலர் தற்போது பாதுகாப்பான முகாம்களிலும் உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

“என்னைப் பொறுத்தவரையில் எல்லா பெண்களும் அவர்களால் என்ன சாதிக்கமுடியும் என்பதை உணரவேண்டும். அப்போதுதான் அவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறுவார்கள்” என்கிறார் ரேகா மிஸ்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் இணைந்த சோனியா !

G SaravanaKumar

கொரோனா: 202 நாளுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆன பெண்ணுக்கு பிரமாண்ட வரவேற்பு!

Halley Karthik

ரூ.34 லட்சம் மதிப்பில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கல சிலை – ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு

Dinesh A