முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதற்கு சரியாக நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், அம்மா உணவகங்கள் ரூ.786 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு நாளுக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும். அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறதுவதாக மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும். அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ, அவ்வாறே அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

Halley Karthik

பதவி மீது ஆசையில்லை: உதயநிதி ஸ்டாலின்

Halley Karthik

அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000

Janani