அம்மா உணவகத்தின் பெயர் மாற்றமா?-உதயநிதி பதில்

திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினரும்  திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா…

திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினரும்  திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் திராவிடப் பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

https://twitter.com/Udhaystalin/status/1570805407769296896

 

இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, சுப வீரபாண்டியனின் மிகப்பெரிய இரசிகன் நான். திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சிப்பாசறைகளை நடத்தி முடிப்போம் என அவர் தெரிவித்தார்.

சுப வீரபாண்டியன், நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார் என வீட்டிலிருந்து புறப்படும்போது தந்தையாரிடம் சொன்னேன். என்னுடைய வாழ்த்துக்களை திராவிடப் பள்ளிக்கு சொல்லிவிடு என கூறியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நமக்கு இன்னும் பல ஜெயரஞ்சன்கள் சுப வீரபாண்டியன்கள் வேண்டும் எனக் கூறினார். நேரம் கிடைக்கும்போது என்னென்னவோ யுடியூபில் பார்க்கிறோம். அதேபோல் சுப வீரபாண்டியனின் உரையை பார்க்க வேண்டுமெனக் கூறினார்.

நானும் மாணவனாகவே இங்கு வந்துள்ளேன். சந்தேகங்களை கேட்டால் குழந்தைக்கு சொல்லித்தருவதைப் போல சுப வீரபாண்டியன் சொல்லித்தருவார் . சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனும், நானும் சட்டமன்றத்தில் ஒன்றாக தான் அமர்ந்து இருப்போம் அது பள்ளி மாதிரித்தான் இருக்கும் எனக் கூறினார்.

பெரியார் உணவகத்தை திறந்து வைக்கும் சுப வீக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அம்மா உணவகத்தை பெரியார் உணவகமாக மாற்ற வேண்டுமென கூறினார்கள். ஆனால் முதலமைச்சர் கண்டிப்பாக இதற்கு ஒத்துகொள்ளமாட்டார். நாம் தனியாக பெரியார் உணவகம் அமைத்து இலவசமாக சாப்பாடு போடலாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதநிதி ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.