அம்மா மினி கிளினிக்குகளால் எந்த பயனும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மெய்நிகர் திரை மூலம் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மெய்நிகர் திரை மூலம் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் மண்டல வாரியாக கண்காணிக்க மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

https://twitter.com/Subramanian_ma/status/1478218179897790465

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அறிகுறிகள் இல்லாமல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால் வீடுகளிலே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். மேலும், அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே ஏற்படுத்தப்பட்டதாகவும், அவற்றின் மூலம் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.