முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகை கிழிப்பு: இருவர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

சென்னை மதுரவாயல், பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகையைக் கிழித்த இரண்டு பேர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகம் பெயர்ப்பலகையை இருவர் கிழிக்கும் வீடியோ சமூகவலைதளங்கில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ட்விட்டர் மூலம் பதிலளித்த மா.சுப்பிரமணியம், ‘ சமந்தப்பட்ட நபர்கள் கட்சியிலிருந்து நீக்க ஸ்டாலின் உத்தரவிட்டார் ’என்று பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ’ சென்னை மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையைக் கிழித்த இருவரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

Jayapriya

புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

Karthick

லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்: ராஜஸ்தான் விரைந்த போலீசார்!

Saravana