முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

அம்மா சிமெண்ட் முறைகேடு வழக்கு – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அம்மா சிமெண்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குந்தடம் ஊராட்சியில் அம்மா சிமெண்ட் விநியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க  நிர்வாகி யோகேஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த மனுவில், போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்ட் மூட்டைகளுக்கான தொகையை தனியார் ஒப்பந்ததாரர் நிறுவனம் செலுத்தியதாக புகாரளிக்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அம்மா சிமெண்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மக்களோடு மக்களாக இருந்தால்தான் ஆதரவு கிடைக்கும்”

G SaravanaKumar

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்

G SaravanaKumar

அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்

Halley Karthik