‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
‘வேட்டையன்’ திரைப்படத்தின் டீசர் ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தூத்துக்குடி, சென்னை, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
https://twitter.com/LycaProductions/status/1786368868459434162
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை, தற்போது படக்குழுவினர் மும்பையில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட போது, அமிதாப்பச்சனுடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
இதைத் தொடர்ந்து தற்போது நடந்து வரும் படப்பிடிப்பில், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இருவருமே மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் கோட் சூட் அணிந்து நடிக்கிறார்கள் கண்ணை கவரும் விதத்தில் உள்ள இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.







