முக்கியச் செய்திகள் சினிமா

அமிதாப் வீட்டுக்கு வாடகைக்கு சென்ற ஹீரோயின்: மாத வாடகை ரூ.10 லட்சமாம்!

நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டுக்கு பிரபல நடிகை வாடகைக்கு செல்கிறார். அதன் மாத வாடகை அதிகமல்ல, வெறும் ரூ.10 லட்சம்தான் என்கிறது பாலிவுட்.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மும்பையின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்த பங்களாக்கள் உள்ளன. அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28 வது மாடியிலும் டூப்ளக்ஸ் வீடு அவருக்கு இருக்கிறது. இந்த வீட்டை, பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு, நடிகர் அமிதாப் பச்சன் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

நடிகை கீர்த்தி சனான், இந்தியில் தில்வாலே, க்ளாங்க், பரேலி கி பார்ஃபி, ஹவுஸ்புல் 4 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேனொக்கடே என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க, அவர் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். அட்வான்ஸ் தொகையாக ரூ.60 லட்சமும் மாத வாடகையாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது ஒரு இடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். 15 வருடத்துக்கு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

நடுவானில் அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கான் பெண்

Gayathri Venkatesan

உலகின் முதல் கேமரா வடிவ கார்: திருச்சி இளைஞர் அசத்தல்

Gayathri Venkatesan

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Saravana Kumar