முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாக். சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானுக்கு கடந்த 9-ஆம் தேதி சென்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, கராச்சியில் நாளை (13-12-2021) தொடங்குகிறது. அதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஆல்ரவுண்டர் ராஸ்டன் சேஸ், வேகப்பந்துவீச்சாளர் ஷெல்டன் காட்ரெல், கைல் மேயர்ஸ் ஆகியோருக்கும் பயிற்சியாளர் குழுவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ் (Johnny Grave) கூறும்போது, ‘எங்கள் அணியில் மூன்று வீரர்கள் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது எங்கள் அணிக்கு பின்னடைவுதான் என்றாலும் சிறப்பாக செயல்படுவோம். அடுத்த பரிசோதனையின்போது அவர்கள் தொற்றில் இருந்து விடுபட்டது தெரியவந்தால் அணியில் இணைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Halley Karthik

சென்னையில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; ஆணையர் தகவல்!

Saravana Kumar

மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!

Vandhana