சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல். முருகன், பொறுப்பாளர் சி.டி. ரவி, ஆகியோர் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் திரண்டு, மேளதாளம் முழங்க அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, காரில் இருந்து இறங்கி தொண்டர்களை பார்த்து கை அசைத்த படி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றார். பின்னர் காரில் ஏறி சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.பி.சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.