இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கொண்டாடி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கியது. கொரோனாவின் முதல் அலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி பரிசோதனையில் உலக நாடுகள் இறங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ச்சியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு, இதில் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இந்நிலையில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தியா செலுத்தியிருப்பதை கொண்டாடும் விதமாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அதன் விமானத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும், மருத்துவர்களின் புகைப்படத்தையும் இடம் பெறச் செய்துள்ளது. மூன்று போயிங் 737 விமானத்தில் பிரதமர், மருத்துவர்கள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் நடந்த இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சக் மாண்டவியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.








