#America | தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு! – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326…

America,plane,fire ,landing, flight, KSAN-KLAS

லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கிய விமானம் ஒன்றில் லேண்டிங் கியரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. திடீரென விமானிகளில் ஒருவர் விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனித்தார். பின்னர், அவசர நிலையை அறிவித்தனர்.

இதையும் படியுங்கள் : அலைமோதிய கூட்டம் | 3.5 நிமிடங்களுக்கு ஒரு முறை #Metro சேவை…மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து, அவசரமாக விமானம் தரையிறங்கியது. ஓடுபாதையில் தரையிறங்கிய விமானத்தில் தீடீரென தீப்பிடித்தது. இதற்கிடையே, விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டனர். விமானத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.