முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை: குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதில் முதல் தவணையாக கடந்த மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாயுடன் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் வரும் 25ஆம் தேதிக்குள் இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:

Related posts

உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக முடிவு

Halley karthi

சசிகலா குணம் அடைய தொண்டர்கள் பிரார்த்தனை!

Niruban Chakkaaravarthi

சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் திடீரென தீ விபத்து!

Niruban Chakkaaravarthi