அம்பேத்கர் & பூவை மூர்த்தி பிறந்தாளை முன்னிட்டு பேரணி- நூற்றுக்கணக்கான புரட்சி பாரதம் கட்சியினர் பங்கேற்பு

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் மறைந்த பூவை மூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாபெரும் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்தியாவின் முதல் சட்ட…

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் மறைந்த பூவை மூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மாபெரும் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும்,அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிவருமான அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் ஏப்ரல் 14ம் தேதி நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக அம்பேத்கர் மற்றும் மறைந்த அக்கட்சியின் தலைவர் பூவை மூர்த்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு மாபெரும் கொடி அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ஷங்கர் தலைமையில் நூற்றுக்கணக்கான அக்கட்சியினர் அண்ணல் அம்பேத்கரின் அலங்கரிக்கப்பட்ட தேருடன் மாமல்லபுரம் கருகாத்த அம்மன் கோவிலில் இருந்து பேரணியாக புறப்பட்டு பேரூராட்சி அலுவலகம் வரை மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடியுடன் வந்து சேர்ந்தனர்.

பின்னர் அலங்கரிக்கபட்டு வைத்திருந்த அண்ணல் அம்பேத்கர் மற்றும் மூர்த்தி ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்பேரணியில்சுமார் 500க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கலந்து கொண்டனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.