காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் சாலையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டதிற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அரசின் சார்பில் பாதாள சாக்கடை மற்றும் மெட்ரோ வாட்டர் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் சென்னையிலிருந்து சுங்குவார்சத்திரம்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் நகர பேருந்து நிலையத்திற்குள் வராமல் நேரடியாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று விடுகின்றன.
இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து ராஜிவ்காந்தி நினைவகம் அருகே பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதால் பேருந்துக்காக காத்திருக்கும் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் தற்காலிக நிழற்குடை ஒன்றை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







