பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் த்ரிவிக்ரமுடன் நான்காவது முறையாக புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன் இயக்குநர் த்ரிவிக்ரம் வெற்றிக்கூட்டணி என அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்தால் கண்டிப்பாக படம் ஹிட் தான். இவர்கள் இணைந்த சன் ஆஃப் சத்யமூர்த்தி, அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட படங்கள் மிகப்பெறும் வெற்றி பெற்றன. குறிப்பாக அல வைகுந்தபுரமுலோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் இயக்குநர் த்ரிவிக்ரம் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது- படத்திற்கு பெயர் வைக்கப்படாத நிலையில், அல்லு அர்ஜுன் 22 (ஏஏ22) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர்களின் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து வந்த நிலையில், புதிய படத்திற்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக வந்த அல வைகுந்தபுரமுலோ படத்திற்கு தமன் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஹாரிகா & ஹாஷினி புரெடக்ஷன் தயாரிக்கிறது.





