மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி!

மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி 24 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது…

மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி 24 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க வேண்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் சிறுமியை ஏமாற்றி ஒருவர் கர்ப்பம் ஆக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தேவையற்ற கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவு வழங்குமாறு மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை வாட்ஸப் வீடியோ காலில் தொடர்பு கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிறுமியின் 24 வாரம் கர்ப்பத்தைக் கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்டு அறிந்தார்.

அண்மைச் செய்தி: ‘பக்ரித் திருநாள்; தலைவர்கள் வாழ்த்து!’

சிறுமியின் உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்தில் கணக்கில் கொண்டு கர்ப்பத்தைக் கலைக்க முடியும் என மருத்துவக் கல்லூரி மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து, நீதிபதி மாணவியின் விருப்பத்திற்கு ஏற்ப விரைவில் இந்த கர்ப்பத்தைக் கலைக்க போதுமான மருத்துவத் துறை நிபுணர், உரிய மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.