சுருளி அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி: அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5 நாட்களுக்குப் பிறகு அனுமதி அளித்ததால், கூட்டம் அலைமோதுகிறது. தேனி மாவட்டம்,  கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5 நாட்களுக்குப் பிறகு அனுமதி அளித்ததால், கூட்டம் அலைமோதுகிறது.

தேனி மாவட்டம்,  கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி
அருவி சுற்றுலாத் தலமாகவும்,  ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.  இந்த
அருவியில் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் குளித்துவிட்டு சுவாமி தரிசனம்
செய்துவிட்டு செல்வது வழக்கம்.  இந்நிலையில்,  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்
பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள்
குளிக்க வனத்துறையினர் கடந்த ஐந்து தினங்களாக தொடர் தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில்,  இன்று (டிச.23) வெள்ளப்பெருக்கு சீராகி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு
போதிய அளவில் தண்ணீர் வருவதால் வனத்துறையினர் தடையை அகற்றி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிப் பகுதிக்கு வரும் ஐயப்ப பக்தர்களும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 5 நாட்களுக்குப் பிறகு சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி
அளித்ததால் அருவியில் கூட்டம் அலைமோதுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.