முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சிங்காரச் சென்னை 2.0: திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.98 கோடி ஒதுக்கீடு

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில் புதிய திட்ட பணிகளை மேற்கொள்ள 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்திட 2022ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 500 கோடி ரூபாய் ஒதுக்குவதாக முதலமைச்சர் அறிவித்தார். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிய திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டு திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயான பூமிகள், 16 பள்ளி கட்டிடங்கள் மற்றும் புராதான சின்னமான விக்டோரியா பொது அரங்கும் புதுப்பிக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள மொத்தம் 98.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள பணிகளை கண்காணிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மினா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது கண்காணிப்பு குழு வழங்கியுள்ள வழிகாட்டுதலை பின்பற்றி திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அண்மைச் செய்தி:’மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 98 கோடி ரூபாய் நிதியில், 3.5 கோடி செலவில் பூங்காக்களும், 1.15 கோடி செலவில் விளையாட்டு திடல்களும், 3.8 கோடி செலவில் மயான பூமியும், 56 கோடி செலவில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பள்ளி கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகளும், 32 கோடி செலவில் விக்டோரியா பொது அரங்கு புதுப்பிக்கும் பணிகள் உட்பட மொத்தம் 42 வகையான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை உயிரிழப்பு

G SaravanaKumar

மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் – விஜய் வசந்த்

Gayathri Venkatesan

தனது மகளின் தலையை வெட்டி எடுத்த தந்தை; உ.பியில் கொடூரம்!

Halley Karthik