தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில், டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதால் டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்தபின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ம.பவித்ரா








