ஓபிஎஸ் உடன் கூட்டணி: உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் – டிடிவி தினகரன் பேட்டி!

ஓபிஎஸ் உடன் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவு அறிவிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது.. ” தமிழ்நாட்டு மக்களின்…

ஓபிஎஸ் உடன் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவு அறிவிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது..

” தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பாட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்  என உறுதியாக தெரிவித்து இருந்தேன்.  விவசாயிகளை,  தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும்,  ஸ்டெர்லைட் , மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என போன்றவற்றையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்கிறது.

தற்போது தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.  அதனால் நாங்கள் கடுமையாக விமர்சிப்பதை குறைத்துள்ளோம்.  வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும்.

திருவள்ளுவர் விவகாரத்தில் ஆளுநரின் செயல் அந்த பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.  இது போன்று நடவடிக்கைகள் ஆளுநர் செய்வது தவறு.  அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கை.  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி தற்போது யோசிக்கவில்லை ” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.