முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக பெரியண்ணன் மனோபாவத்துடன் நடந்து கொள்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பேசியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக பெரியண்ணன் மனோபாவத்துடன் நடந்து கொள்ளவில்லை என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் எனவும், சொந்தக் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்த கே எஸ் அழகிரி அவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் அவர் விளக்கமளித்தார். அதேபோல் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் திமுகவால் தர முடியாது எனவும், சுமூகமாக பேசி கூட்டணி தொகுதி பங்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

காதலிக்க மறுத்த பெண்: ஆசிட் வீசி விடுவதாக மிரட்டும் இளைஞர்!

Jayapriya

தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு தனியார் விடுதியில் கட்டண சலுகை

Gayathri Venkatesan

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

Saravana Kumar