நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது: சீதாராம் யெச்சூரி

தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி வலிமையாக இருக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்…

தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி வலிமையாக இருக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பாஜக – அதிமுக சக்திகளை எந்தக் காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது எனவும் கூறினார். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாகவும், பாஜக – அதிமுக அரசுகள் அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளதாகக் கூறினார். தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி வலிமையாக இல்லை என்றும் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.