முக்கியச் செய்திகள் தமிழகம்

‘அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்ப்பு’ – ஓபிஎஸ்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்க்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும்‌, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும்‌ அவரவர்‌ பொறுப்புகளில்‌ செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும்‌, இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்‌, தொகுதிக்‌ கழகச்‌ செயலாளர்‌ மற்றும்‌ தொகுதிக்‌ கழக இணைச்‌ செயலாளர்கள்‌ பதவிகள்‌ மீண்டும்‌ தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள்‌ மீண்டும்‌ அந்தந்தப் பொறுப்புகளில்‌ பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும், காலியாக உள்ள பொறுப்புகள்‌ விரைந்து நிரப்பப்படும் எனக் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘மத்திய அரசு இபிஎஸ்-ஐ மட்டுமே அங்கீகரித்துள்ளது’ – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார்’

கழக உடன்பிறப்புகள்‌ அனைவரும்‌ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள்‌, ஊராட்சி செயலாளர்கள்‌, தொகுதிக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ மற்றும்‌ தொகுதிக்‌ கழக இணைச்‌ செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்‌ கேட்டுக்‌ கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மோடி, அமித்ஷாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

Web Editor

மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று.

Vandhana

உயர்கல்வி உறுதித் திட்டம்; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Arivazhagan Chinnasamy