’இன்று வரை தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சோழர்கள் வகுத்தது’

நாம் வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது எனப் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.…

நாம் வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது எனப் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழில் நடிகர் சூர்யா, தெலுங்கில் மகேஷ்பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால், மற்றும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் ஆகியோர் டீசரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் கார்த்தி, இன்று வரை தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சோழர்கள் வகுத்தது எனவும், நாம் வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது எனக் கூறினார்.

https://twitter.com/news7tamil/status/1545426851308285952

அண்மைச் செய்தி: ‘மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று’

2000 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை தற்போது வரை கம்பீரமாக உள்ளது எனக் கூறிய அவர், என் அம்மாவிடம் வந்தியத்தேவன் கதாபாத்திரம் செய்யப் போகிறேன் என்று சொல்லும் போது என் அம்மா என்னிடம் சொன்னது நான் திருமணம் செய்தால் வந்தியத்தேவன் போல் ஒருவனைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்ததாக தன்னுடைய அம்மா சொன்னதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தான் வரலாறு வகுப்பில் தூங்கியதாகத் தெரிவித்த அவர், நான் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரிடம் சென்று வந்திய தேவன் குறித்துக் கேட்டதாகவும், அந்த வந்திய தேவன் போல, இந்த வந்திய தேவன் மணிரத்தினம் கற்பனை நிறைந்தது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.