அனைத்து டேப்லெட், போன்களில் USB-C டைப் சார்ஜரிங் போர்ட்களை 2024-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து ஃபோன்களும் டேப்லெட்டுகளும் ஒரே சார்ஜிங் போர்ட்களைப் (USB-C) பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை 2024-ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்தவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்கள் சார்ஜ் செய்ய USB-C போர்ட்டை ஏற்கனவே பயன்படுத்துகின்றன இந்நிலையில், இந்த தீர்மானத்தின்படி ஆப்பிள் ஐபோனை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அந்நிறுவனத்துக்கு எழுந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தும் பல்வேறு சார்ஜிங் போர்ட்கள் மின்னணு கழிவுகளை ஊக்குவிக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ஐரோப்பிய ஒன்றியம் வாதிட்டது.
ஆனால், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் எந்த சார்ஜிங் போர்ட்களை சேர்க்க வேண்டும் என்பதில் நெகிழ்வுத்தன்மை இருப்பது சிறந்த செயல்திறனை அனுமதிக்கிறது என்று வாதிட்டது. மேலும், சில அறிக்கைகளின்படி, ஆப்பிள் சார்ஜிங் பிளக்கை முழுவதுமாக அகற்ற விரும்புவதாகவும், அதற்கு பதிலாக வயர்லெஸ் சார்ஜிங் மூலம் பயனர்கள் தங்கள் சாதனங்களை இயக்குவதற்கு ஊக்குவிப்பதாகவும் தெரிகிறது.
https://twitter.com/news7tamil/status/1534155041908858880
இந்த புதிய ஒப்பந்தம் கோடை விடுமுறைக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் மற்றும் கவுன்சிலால் முறையாக அங்கீகரிக்கப்படும் எனவும், பின்னர் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடப்படும். இது 20 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் எனவும், விதிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குப் பிறகு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆண்டுக்கு முன்னர் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







