முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அமைச்சருடன் தமிழ்நாடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் நாளை சந்தித்து பேசுகின்றனர்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, நாளை பிற்பகல் 1.30 மணி அளவில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளது. இதற்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, மாலையில் அனைத்து கட்சி பிரநிதிகளும் டெல்லி விரைந்தனர்.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்

திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, பாமக சார்பில் ஜி.கே.மணி, பாஜக சார்பில் பால் கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர், டெல்லி புறப்பட்டு சென்றனர். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியார் ஆகியோரும் டெல்லி விரைந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

சைக்கிள் பயணம்…இளநீர் விற்கும் பாட்டியிடம் அன்புருக பேச்சு…மக்களின் முதலமைச்சர் ஸ்டாலின்

Vandhana

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

Saravana Kumar

விவசாயி மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ்!

Saravana Kumar