முக்கியச் செய்திகள் இந்தியா

எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் ஆரம்பிக்கவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

இந்த நிலையில் ஜனவரி 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து அதில் விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் எனவும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற குழுத் தலைவர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை கூட்டத் தொடர் ஆரம்பித்த மறுநாள் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 8ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 8ஆம் தேதி முடியவுள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவை கூட்டமும் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்தம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

Advertisement:
SHARE

Related posts

மேக்ஸ்வெல் விளாசல் வீண்: சன் ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி

Saravana Kumar

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலினுக்கு அற்புதமம்மாள் நன்றி

Vandhana

மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

எல்.ரேணுகாதேவி

Leave a Reply