முக்கியச் செய்திகள் தமிழகம்

10,11-ம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி

10,11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த, மாற்றுத்திறனாளி தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததைப் போல, 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் காரண மாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், துணைத் தேர்வுகளை, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

30 கோடி வாடிக்கையாளர்களை கவர பிளிப்கார்ட் திட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் கடன் ரத்து – மு.க ஸ்டாலின்

Gayathri Venkatesan