53 ஆண்டுகளுக்கு பின்னர் யுஎஸ் ஓபன் கோப்பை – பிரிட்டன் வீராங்கனை அசத்தல்

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றார் பிரிட்டனின் எம்மா ரடுகானு. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் ரடுகானு, கனடாவின் லேலா பெர்னாண்டஸை எதிர்கொண்டார். 51 நிமிடங்கள் வரை நீடித்த…

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றார் பிரிட்டனின் எம்மா ரடுகானு.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் ரடுகானு, கனடாவின் லேலா பெர்னாண்டஸை எதிர்கொண்டார். 51 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில், 6-4, 6-3 எனும் செட் கணக்கில் ரடுகானு வெற்றிபெற்றார்.

7 ஆண்டுகளுக்கு பின்னர் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று வீராங்கனையாக ரடுகானு சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக வர்ஜீனியா வேட் எனும் பிரிட்டன் வீராங்கனை தனது 23 வயதில் 1968ல் இறுதியாக யுஎஸ் ஓபனில் வென்றுள்ளார். பின்னர் இறுதியாக 1977ல் விம்பிள்டன் கோப்பையை வென்றார்.

இதுதான் பிரிட்டன் கடைசியாக வென்ற கிராண்ட் ஸ்லாம் கோப்பையாகும். இவரையடுத்து 53 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 18 வயதில் ரடுகானு யுஎஸ் ஓபன் கோப்பையையும், 44 ஆண்டுகளுக்கு பின்னர் கிராண்ட் ஸ்லாமையும் வென்று சாதனை படைத்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் தொழில்முறை டென்னிஸில் எம்மா தடம் பதித்தார். தகுதி போட்டியில் எதிலும் தோற்காமல் வென்று கிராண்ட் ஸ்லாமையும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.