முக்கியச் செய்திகள் சினிமா

’உங்க அற்புதமான திறமையை …’ தனுஷை பாராட்டும் அக்‌ஷய்குமார்

’உங்கள் அற்புதமான திறமையை வியக்கிறேன்’ என்று பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள இந்திப் படம் அட்ரங்கி ரே. ஆன்ந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ அக்‌ஷய்குமார், நடிகை சாரா அலிகான் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பங்கஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கடந்த காதலர் தினத்துக்கு இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் இப்போது வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. அதற்காக மும்பை சென்றுள்ள நடிகர் தனுஷ், படக்குழுவினருடன் இணைந்துள்ளார். நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் இருவரும் மேலே பார்ப்பது போல இருக்கின்றனர்.

அதற்கு கேப்ஷனாக, ’அட்ரங்கி ரே’ படத்தில் என்னுடன் நடித்திருக்கும் தனுஷை சந்தித்தேன். அவர், ‘எப்போதும் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார். நான், ‘உங்கள் அற்புதமான திறமையையே நான் பார்த்துக்கொண்டிருக்கி றேன்’ என்று பதிலளித்தேன். பிறகு இருவரும் மேலே பார்த்தோம். அப்போது இது நடந்தது’ என்று செல்ஃபி புகைப்படம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக, ’இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன். எனது கேரக்டர் சிறியதுதான். ஆனால் இது தனுஷ்- சாரா அலிகான் படம்தான். அவர்கள்தான் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இந்தக் கதையை ஆனந்த் எல் ராய் சொன்னதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார் அக்‌ஷய்குமார்.

Advertisement:
SHARE

Related posts

பாலின விகிதாச்சாரம்: முதன் முறையாக பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Halley Karthik

SRH VS RCB: இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Saravana Kumar

ஆழ்கடலில் விபத்து: மீனவர்களை மீட்டுக் கொடுக்கவேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை!

Ezhilarasan