குப்பை கொட்டுவதில் அக்கப்போர் – குடும்பிப்பிடி சண்டை போட்ட பெண்கள்!

கோவை மேட்டுப்பாளையத்தில் குப்பைக் கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் இரு பெண்கள் குடிமிப்பிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேட்டுபாளையத்தில் அக்கம்பக்கம் வீட்டினரிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வுந்துள்ளது. இதனையடுத்து நேற்று…

கோவை மேட்டுப்பாளையத்தில் குப்பைக் கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் இரு பெண்கள் குடிமிப்பிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேட்டுபாளையத்தில் அக்கம்பக்கம் வீட்டினரிடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வுந்துள்ளது. இதனையடுத்து நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டின் வாசலில் குப்பைகளை பெருக்கி, எதிரே உள்ள  வீட்டின் வாசலில் கொட்டியுள்ளனர்.

அப்போது, அந்த வீட்டில் இருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குப்பைகளை அகற்றுமாறு கூறியுள்ளனர். ஆனால், அந்த தம்பதி இதனை கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வீட்டுக்காரர்கள் வீடு முன் கொட்டப்பட்ட குப்பையை எடுத்து எதிர் வீட்டு முன் கொட்டினர். இதனால், இரு வீட்டுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.

கணவன்,மனைவி இருவரும் எதிர் வீட்டில் இருந்து வந்த மூன்று பெண்களும் சரமாரியாக சண்டையிட்டு கொண்டனர். சண்டையிட்ட பெண்கள் குடம், தாம்பூலம், துடைப்பம் முதலானவற்றால் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அப்போது ஆண் ஒருவரும் துடைப்பதால் பெண்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வீட்டின் அருகே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.