நடிகர் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் பூஜா ஹெக்டேவுக்குப் பதிலாக ஸ்ரீலாலா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு குணடூர் காரம் படத்தில் பிசியாக உள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் தொடர்பாக இணையத்தில் பல தகவல்கள் உலா வருகின்றன.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஸ்ரீலாலா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க இவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதனிடையே ஸ்ரீலாலா நடிக்க வேண்டிய பாத்திரம் மீனாட்சி சவுத்ரிக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் புதிய ஷெட்யூல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக தெரிகிறது.
ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி ஃபெமினா 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் இசட வாகனமுலு நிலுபரடு மூலம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் 2021 ஆம் ஆண்டு அறிமுகமானார்.







