மாயாவதியின் அரசியல் வாரிசானார் ஆகாஷ் ஆனந்த் – இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனது அரசியல் வாரிசாக மீண்டும் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி இருந்து வருகிறார். அவருக்கு பிறகு யார் என்கிற…

தனது அரசியல் வாரிசாக மீண்டும் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி இருந்து வருகிறார். அவருக்கு பிறகு யார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார்.  கடந்த தேர்தல் கூட்டங்கள் அவரது தேர்தல் பிரச்சாரம் தவறாக இருந்ததாக கட்சியினர் எழுப்பிய புகாரை தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று லக்னோவில்  பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  இந்த  கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாயாவதி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் ஆகாஷ் ஆனந்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம், மாயாவதி தனது மருமகனை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தி நீக்கி, அவர் தனது வாரிசு இல்லை என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்த அறிவிப்பில், “கட்சியின் விருப்பத்தின் பேரில், எனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், எனது அரசியல் வாரிசு என்ற பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது ஆகாஷ் ஆனந்த் மீண்டும் அதே பதவியில் தொடர்வதாக இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  மாயாவதி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.