உடைந்தது 2k கிட்ஸ்களின் உயிர்நாடி இசைக்குழு

இன்றைய 2k கிட்ஸின் இதய துடிப்பாக விளங்கிய BTS இசைக் குழு தனது பிரிவை அறிவித்துள்ளது. தென் கொரியாவை அடிப்படையாக கொண்ட இந்த இசைக்குழுவானது 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2013ம் ஆண்டு பிக் ஹிட்…

இன்றைய 2k கிட்ஸின் இதய துடிப்பாக விளங்கிய BTS இசைக் குழு தனது பிரிவை அறிவித்துள்ளது.

தென் கொரியாவை அடிப்படையாக கொண்ட இந்த இசைக்குழுவானது 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2013ம் ஆண்டு பிக் ஹிட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் ((yt1s.com – BTS 방탄소년단 No More Dream Official MV_1080p))அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இசை குழுவிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

BTS குழுவினர் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை உருவாக்குவார்கள். இக்குழு 7 பேர் கொண்ட குழுவாக இயங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த BTS பாப் குழுவானது கே பாப் என்று அழைக்கப்படுகிறது. கொரிய நாட்டை சார்ந்த பாப் குழு என்பதால் கே பாப் என்றழைக்கப்படுகிறது .

இளமை துடிப்புடன் கண்களை கவரும் பட தொகுப்புடன் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய பாடல்களை வழங்கி கொரியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் புகழ் பெற்றனர். தற்போது இந்த குழுவில் உள்ள 7 பேரும் தனித்தனியாக இயங்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இது BTS ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய BTS குழுவின் ஆர்எம், BTS இசைக்குழு கலைக்கப்படவில்லை,நாங்கள் காலவரையற்ற பிரிவில் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் வளர்ச்சி காண முடியவில்லை என்ற காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை வெளியிடும்போது BTS குழுவினர் உடைந்து அழுவது, ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

“நாங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் இணைவோம்” என்று அவர்கள் தெரிவித்திருப்பது மட்டுமே ரசிகர்களின் ஒரே ஆறுதலாக உள்ளது.

 

கட்டுரையாளர்: சந்தோஷ்குமார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.