31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா Instagram News

அஜித்தின் அடுத்த சம்பவம்; ஏகே 62 குறித்த அசத்தலான அப்டேட்!

நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பரவலாக்கப் பேசப்படுகிறது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு படங்களைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித் நடிக்கும் 62-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஜித் நடிக்கும் 62வது புதிய படத்தின் ஓடிடி உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அஜித்துக்காக விக்னேஷ் சிவன் எழுதிய கதை அவருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் திருப்திகரமாக இல்லை என்றும், அதனால் படத்திலிருந்து அவர் விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பதிலாக ‘ஏகே 62’ படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் இருந்து அஜித்தின் படத்தை நீக்கியுள்ளார். பயோவில் இருந்து ‘ஏகே 62’ என்ற வார்த்தைகளையும் நீக்கினார். இதனால் படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘AK62’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜீத்தும், மகிழ் திருமேனியும் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஜய்யின் ‘லியோ’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ‘ஏகே62’ படத்தின் அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading