காதலர் தினத்தையொட்டி மியூசிக் வீடியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருவதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்தநிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தயாரிக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு, பே பிலிம்ஸ் சார்பில் வெளியிடப்படவுள்ள மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கும் பணியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். மியூசிக் வீடியோ படப்பிடிப்புகள் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நாளை துவங்க உள்ளது. மியூசிக் வீடியோவில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் பணியாற்றும் குழுவினரை இறுதிசெய்யும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார்.
ஓட்டல் ஒன்றில், மியூசிக் வீடியோ பற்றிய விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் குழுவினர் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை, பே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.







