விமானத்தில் பயணிப்பதற்காக மெட்ரோ ரயில்கள் மூலம் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்காக சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களிலேயே
செக்-இன் (Check in) செய்யும் வசதி சோதனை அடிப்படையில் தொடங்கப்படவுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டத்தை குறைக்கவும், விமான நிலைய ஊழியர்களின் வேலைப்பளு மற்றும் பயணிகளின் காத்திருப்பை குறைக்கவும் சென்னை விமான நிலைய இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை விமான நிலைய இயக்குநர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அலுவலர்கள், இண்டிகோ, ஏர் இந்தியா & விஸ்தாரா உள்ளிட்ட விமான நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. அதில், விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வாகன பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மார்ச் மாதம் முதல் சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட சில
மெட்ரோ இரயில் நிலையங்களில் தொடங்கவும் ஏப்ரல் 14 முதல் முழு அளவில் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள மையத்தில் பயணிகள் தங்கள் பொருட்களை சரிபார்த்தவுடன் அவர்களின் போர்டிங் பாஸ் அங்கேயே வழங்கப்படும்.
அதற்காக விமான நிறுவனங்களின் ஊழியர்கள் அங்கு பணியில் இருப்பார்கள். விமான நிலையத்தை போன்று பாதுகாப்பு, சோதனை வசதிகள் உள்ளதால் பணியை மேற்கொள்வது எளிதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.