எல்.ஐ.சி.,யில் பொது முதலீட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டு இந்த ஆண்டு முதல் எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் 2021 – 22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். அதில் குறிப்பாக பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி, பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் எனவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பல அரசு நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கை தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 2022க்குள் ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: