விமானத்திற்குள் கொட்டிய மழை! -அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு…

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையம் நோக்கி பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தில் மழைத் தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ஏர் இந்தியா போயிங் B787 ட்ரீம்லைனர் விமானத்தின் மேல்நிலை சேமிப்புப் பகுதியில் இருந்து கேபினுள் மழைத்தண்ணீர் கசிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே பயணிகளுக்கான சேவை விதிகளை மீறியதற்காக சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/baldwhiner/status/1729856754068959379

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.