முக்கியச் செய்திகள் இந்தியா

புது ரூட்டு-இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்!

இந்திய கால்பந்து அணிக்காக ரூ. 16 லட்சம் ஊதியத்தில் ஜோதிட நிறுவனத்தை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜோதிடர்களின் ஊக்குவித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு மோட்டிவேட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அது ஜோதிட நிறுவனம் என்று” என்றார். வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்க ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கேலிக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னாள் இந்திய கோல் கீப்பர் தனுமாய் போஸ் கூறுகையில், இதன் மூலம் இந்திய கால்பந்து கூட்டமைப்பு உலக அரங்கில் பெரிய அளவில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு முறையான இளையோர் கால்பந்து லீக் போட்டிகளை நடத்தாமல், பல நல்ல கால்பந்து தொடர்களை முடக்கியது. அதோடு மட்டுமல்லாமல் தற்போது ஜோதிடர்களிடம் இந்திய கால்பந்தை ஒப்படைத்தது இந்தியக் கால்பந்தையே கேலிக்குரியதாக்கும் முயற்சியாகும். இந்த ஜோதிடம் எல்லாம் ஒரு திரைதான். நிர்வாகிகள் தங்கள் வெளிநாட்டு சொகுசுப் பயணத்துக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்திய கால்பந்துக் கூட்டமைப்பில் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். இதனை கூடிய விரைவில் அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.

இந்தியக் கால்பந்தில் ஜோசிடம் ஒன்றும் புதியது இல்லை. ஒருமுறை டெல்லியில் உள்ள கால்பந்து கிளப் ‘பாபா’ என்ற ஒருவரை நியமித்தது. போட்டியில் வென்ற பிறகு அவரால்தான் போட்டியை வென்றதாகக் கூறியதும் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனில் சேத்ரி, 3 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து இந்தியாவின் சிறந்த ஆசியக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியாக மாற்றியதுகூட இப்போது ஜோதிடர் ஆசீர்வாதத்தினால் என்று பேசப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கால்பந்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொலைப்பேசி ஒயர் மாடலில் புதியவகை நெக்லஸ்: வைரலாகும் புகைப்படம்!

Halley Karthik

31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை: டிஜிபி சைலேந்திர பாபு

Arivazhagan CM

தொடர்ந்து தோல்வி.. சன் ரைசர்ஸ் அணி கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்!

Halley Karthik