இந்தோனேசியாவில் மேற்குசுலேவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்குசுலேவேசி பகுதியில் மாமுஜு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்கடர் அளவுகோலில் 6 புள்ளி 2 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. தூக்கிக் கொண்டிருந்த பலர் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கினர். இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இடிபாடுகளில் சிக்கி 70 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மமுஜு மற்றும் மஜேன நகரங்களில் இருந்து 27,850 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர். இதுவரை இந்த நிலநடுக்கத்தால் 800 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







