உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு – AICTE

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20…

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள், தங்களின் படிப்பை தொடர வாய்ப்பு வழங்க வேண்டும் என பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்காக சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வியை தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் படிப்பை தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உக்ரைன் மாணவர்களை அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.