தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை…

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தனர்.

தேமுதிகவிற்கு 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் அதிமுகவும் பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதி என்பதால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் இரண்டு மூன்று தினங்களில் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.