அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் அதிமுக விளக்கம் கேட்க வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது ‘அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது; தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் பாஜகவை அம்பலப்படுத்த வேண்டும்’ என்ற பொன்னையன் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வி.பி.துரைசாமி, ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘மின்வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக’
பாஜக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வருவது. இந்த வளர்ச்சி பொன்னையனுக்கு பொறாமையக இருக்கிறது. அதனால் தான் அவர் இப்படி பேசி வருகிறார் என தெரிவித்த அவர், இதனால் மக்களவைத் தேர்தல் கூட்டணியில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும், பாஜக தமிழ்நாட்டு உரிமைகளுக்காகவே போராடும் கட்சி, இரட்டை நிலைப்பாட்டில் இருக்கும் கட்சி அல்ல என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காவிரி பிரச்சனைக்காக கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர் அண்ணாமலை என்றும், ஊழலுக்கு எதிராக குரல் தருபவர் அண்ணாமலை என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








