வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகும், அதிமுக ஆட்சியே தொடரும் என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தொடர்பாக, மு.க. ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.
எந்த துறைகளையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சாதனை புரிந்து பல விருதுகளை பெற்றிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.







