பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் உள்ளார்.இந்நிலையில் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், தமிழக அரசியலில் சசிகலாவின் வருகையை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 26ஆம் தேதி பெங்களூர் செல்ல திட்டமிட்டிருக்கும் அமமுகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சில தினங்களுக்கு முன் காய்ச்சல் இருந்துள்ளது. இன்று திடீர் மூச்சுதிணறலும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ குழுவினர் சிறை வளாகத்தில் சிகிச்சையளித்த நிலையில், மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவுள்ளார். விரிவான மருத்துவ அறிக்கை அதிகாரப்பூர்வமாக வராத நிலையில் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.







