முக்கியச் செய்திகள் தமிழகம்

திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக என்று அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சிவகாசி, திருத்தங்கலில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை திமுக நிறுத்திவிட்டது. சுமார் 52 லட்சம் மானவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த அரசு அதிமுக அரசு. திமுக ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். 2010 ல் நீட்டை கொண்டு வந்தது காங்கிரஸும் திமுகவும்தான்.

இன்றைக்கும் தமிழகத்தில் இருந்து நீட் நீக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. முதல்வர் ஸ்டாலின் அவர்களே என்ன சாதனை செய்தீர்கள். கூட்டு குடிநீர் திட்டம் என பல திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.

ஒரு அரசால் என்ன திட்டம் கொண்டு வர முடியுமோ அத்தனை திட்டங்களையும் அதிமுக அரசு செய்தது. பொறாமையின் காரணமாக அதிமுகவின் திட்டங்களை திமுக அரசு நிறுத்துவிட்டது. பொங்கலுக்கு நியாய விலைக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் வெல்லம் கொடுத்தார். அந்த வெல்லம் ஒழுகுகிட்டே போகுது.

திமுக என்றாலே கமிஷன், கரப்சன், கலெக்சன். சிவகாசி பட்டாசு என்றாலே சிறப்பு உண்டு. நலிவடைந்த பட்டாசு தொழிலை காப்பாற்ற அதிமுக பல நடவடிக்கைகள் எடுத்தது. உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கிறார்கள். மக்கள் வேதனை அடையும் போது அம்மா அரசு பல முயற்சிகள் எடுத்தது.

இந்த திமுக அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது? பட்டாசு தொழிலில் விபத்து ஏற்படும்போது காயம் அடைந்தவர்களை காப்பாற்ற விருது நகர் மாவட்டத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக அரசு.

சிவகாசியை மாநகராட்சியாக்க வேண்டும் என கே.டி ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்தார். அதையும் அறிவித்ததும் அதிமுக அரசுதான்.

உயர் கல்வி துறை அமைச்சர் ஓசியில் மக்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார். அது உங்கள் பணம் அல்ல அது மக்கள் பணம். அமைச்சர் துரைமுருகன் பேசும்போது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் பணம் கொடுப்பது எப்போது என கூறும்போது அவர் நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார். இதற்கெல்லாம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக. அதிமுக மட்டும் தான் மக்களை மதிக்கும் கட்சி கட்சிக்காரர்களை மதிக்கும் கட்சி. தற்போது பொம்மை முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். தமிழகத்தில் போதை பொருள் சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. அதிமுகவை அழிக்க முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

அதிமுகவில் தான் தொண்டர்கள் தலைவராகலாம். ஓட்டு போட்ட மக்களுக்கு ஸ்டாலின் 2 போனஸ் வழங்கியுள்ளார். மின்கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வு. கரெண்ட தொட்டால்தான் ஷாக் அடிக்கும் தற்போது கேட்டாலே சாக் அடிக்குது. படித்தவர்கள், படிக்காதவர்களை ஏமாற்றிய அரசு திமுக அரசு. ஒரு திட்டத்தை அறிவிக்க 38 குழுவை போடுகிறார் ஸ்டாலின். திமுக அரசு அறிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றார் எடப்பாடி பழனிசாமி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை: 6.5 கிலோ தங்கம் சிக்கியது

EZHILARASAN D

இந்தியா – நியூசிலாந்து; நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள்

Halley Karthik

நடிகர் விஜய்யின் தந்தை வீட்டில் பொருட்களை ஜப்தி செய்ய காவல்துறை உதவி கோரி மனு தாக்கல்

Dinesh A