முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் சந்தித்தார்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேனி மக்களவை உறுப்பினரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் நேரில் சந்தித்துப் பேசினார். முதலமைச்சருக்கு பாரதியார் கவிதைகள் என்ற நூலையும் வழங்கினார். தனது தொகுதியான தேனி சார்ந்த கோரிக்கைகளுக்காக முதலமைச்சரை சந்தித்ததாக தகவல் தெரிவித்தார்.
முன்னதாக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற திஷா குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியான செய்தி எனவும், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய அரசு அதிமுக என்றும் குறிப்பிட்டார்.
6 பேரையும் சட்டத்தின்படி முயற்சி எடுக்க வேண்டும் என்றும், ஒரு மகனை இழந்த தாய்க்கு அதிக வலி இருக்கும். இந்த வயதிலும் வயதை பொருட்படுத்தாமல் சட்டத்தின் கதவை தட்டிக்கொண்டிருந்தார்கள் அற்புதம்மாள் என்றும் கூறினார்.







